கொரோனா தடுப்பு பணியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மனைவி: வைரலாகும் புகைப்படம்
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து நடந்து வரும் போரில் தன்னலம் கருதாது மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், தூய்மைப்பணியாளர்கள் என பலர் உயிரை பணயம் வைத்து இரவு பகலாய் பணிபுரிந்து வருகின்றனர். எனவே தான் வல்லரசு நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் மனைவி சவீதா கோவிந்த் அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் தையல் மிஷினில் ஏழை எளியோர்களுக்காக மாஸ்க்குகளை தைத்து கொண்டிருக்கின்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனாதிபதியின் மனைவி தைத்து கொடுக்கும் மாஸ்குகள் டெல்லியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. ஜனாதிபதி மனைவியின் இந்த சேவையை பலர் பாராட்டி வருகின்றனர்.