இளம்பெண்ணுடன் செல்பி எடுத்த அதிபருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Saturday,December 19 2020]

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த இன்னும் பல நாடுகளில் தடுப்பூசி அமலுக்கு வரவில்லை என்பதால் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் மாஸ்க் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தது மட்டுமின்றி இளம் பெண்ணுடன் கடற்கரையில் செல்பி எடுத்த ஒரு நாட்டின் அதிபருக்கு சுமார் இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பைனரோ என்பவர் சமீபத்தில் கடற்கரைக்கு வாக்கிங் சென்று இருந்தபோது திடீரென ஒரு இளம்பெண் அவரிடம் வந்து செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து சிரித்துக்கொண்டே அந்த பெண்ணுக்கு செல்பி புகைப்படத்திற்கு அதிபர் பைனரோ போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையிலும் மாஸ்க் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன

அதிபர் பைனரோ இதுகுறித்து தன்னுடைய விளக்கத்தை அளித்த போதிலும் அந்நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் அதிபர் பைனரோவுக்கு 3,500 டாலர்கள் அபராதம் விதித்தனர். இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் மாஸ்க் அணியாமல் செல்பி எடுத்த காரணத்தால் அவருக்கே அந்நாட்டின் சுகாதாரத்துறை அபராதம் விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது