நவம்பரில் கொரோனா தடுப்பூசி? பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே முடிவு தடுப்பூசி மட்டுமே எனக் கருதப்பட்டு வரும் நிலையில் அத்தடுப்பூசி கண்டுபிடிப்பில் ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னிலையில் இருந்து வருகின்றன. இந்நாடுகளுக்கு இடையே யார் முதலில் கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது என்ற போட்டியும் நிலவுகிறது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா தடுப்பூசி தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையை அடைந்து இருக்கிறது.
அந்தப் பரிசோதனைக்காக இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தடுப்பூசிக்கான பரிசோதனைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் வெற்றிகரமான முடிவுகள் வெளியான நிலையில் தற்போது இறுதிக்கட்ட பரிசோதனையிலும் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்து உள்ளது.
இதனால் ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி இளம் வயது முதல் பெரியவர்கள் வரை ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இங்கிலாந்து அரசாங்கம் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க இருப்பதாகவும் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதற்காக இங்கிலாந்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு நவம்பர் 2 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே கடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு வழியாக கொரோனா தடுப்பூசியின் இறுதியான முடிவை ஆக்ஸ்போர்ட் அறிவித்து இருப்பதாக உலக நாடுகள் பலவும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments