'96' படத்தின் 2ஆம் பாகம்.. விஜய் சேதுபதியின் மனைவியிடம் கதை கூறிய இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான ’96’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை முடித்து விட்டதாக இயக்குனர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் அழகிய காதல் தோல்வி கதையை ’96’ என்ற டைட்டிலில் பிரேம்குமார் படமாக்கி இருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது என்பது தெரிந்தது. இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு, த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடித்த நிலையில், அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் ’96’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் பிரேம்குமார், ’96’ படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதி முடித்து விட்டேன் என்றும் இந்த படத்தின் கதையை விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன், அவருக்கு பிடித்திருந்தது, இதை அடுத்து தான் எனக்கு இந்த படத்தை உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இயற்கை என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து விரைவில் ’96’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments