சமையல் அறையில் நச்சு பொருட்களை வைத்துள்ளோம்.. பிரேம்ஜி மனைவியின் அதிர்ச்சி பதிவு..!

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது சமூக வலைதளத்தில் சமையல் அறையில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் உடலுக்கு நல்லது என்று நினைத்து வைத்திருக்கிறோம், ஆனால் அதில் நமக்கு தெரியாமல் சில நச்சுப் பொருட்கள் வைத்திருக்கிறோம், அவற்றை உடனடியாக கண்டறிந்து நாம் தூக்கி போட வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்தித்தாள்களில் வந்த சில செய்திகளையும் அவர் இணைத்துள்ளார். நாம் அன்றாடம் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்ட செய்திகளை அவர் அதில் இணைத்துள்ளார்.

இதனை அடுத்து இதுபோன்ற மசாலா பாக்கெட்டுகளை நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்களா? அல்லது வேறு ஏற்பாடு செய்திருக்கிறார்களா? என்ற கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பலர் நாங்கள் வீட்டிலேயே மசாலா செய்து வைத்துக் கொள்வோம் என்றும், வீட்டில் மசாலா அரைத்து வைத்துக் கொள்வதுதான் சால சிறந்தது என்றும் கமெண்ட் பகுதி செய்து வருகின்றனர். ஒரு சிலர் சில நிறுவனத்தின் தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளனர்

இந்துவின் இந்த பதிவுக்கு மசாலா பொருட்களில் நச்சுப் பொறுப்புகள் இருக்கிறதே உங்களது பதிவுக்கு பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்துள்ளது, இனிமேல் ஜாக்கிரதையாக நாங்கள் பயன்படுத்துவோம் என்று சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

 

More News

'கைதி 2' படத்தில் நிச்சயம் LCU படம் தான்.. யார் யார் இருக்கிறார்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி

'இந்தியன் 2' முதல் நாள் வசூல் எவ்வளவு? 'விக்ரம்' முதல் நாள் வசூலை முறியடித்ததா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன

'நான் என்ன சீரியல் கில்லரா? பிரசாந்த் நடித்த 'அந்தகன்' டீசர்..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

தமிழ் திரையுலக ஹீரோவுக்கு திருமணம்.. திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் ஹீரோவுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடப்பாவிங்களா.. 'இந்தியன் 2' மீம்ஸ்களுக்கு கதறல் பதில் அளித்த ப்ரியா பவானி சங்கர்..!

கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவரது கேரக்டர் குறித்து வெளிவந்திருக்கும் மீம்ஸ்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது