தலைவா உனக்கா இந்த நிலைமை? ஆடிய ஆட்டம் என்ன.. பிரேம்ஜி மனைவி வெளியிட்ட வீடியோ.!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் அவருடைய மனைவி இந்து அவ்வப்போது பிரேம்ஜியின் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்றுமுன் பிரேம்ஜி வீடு சுத்தம் செய்யும் வீடியோவை அவரது மனைவி இந்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் ஏராளமான காமெடி கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
கங்கை அமரன் மகன் மற்றும் வெங்கட் பிரபு சகோதரர் பிரேம்ஜி, இந்து என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணம் எளிமையாக நடந்தது என்பதும் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிரேம்ஜி மனைவி இந்து, ஹனிமூன் புகைப்படங்கள் உட்பட பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பிரேம்ஜி வீடு துடைப்பது, துணி துவைத்து காயப்போடும் காட்சிகள் உள்ளிட்டவற்றை கொண்ட வீடியோவை பதிவு செய்து ,இதற்கு முன் அவர் சிங்கிளாக இருந்த போது ஜாலியாக இருந்ததையும் தற்போது தற்போது உள்ள காட்சியையும் மாறி மாறி பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ’தலைவா மனசு ரொம்ப வலிக்குது, உனக்கா இந்த நிலைமை’ என்றும் ’என்னடா இது தலைவனுக்கு வந்த சோதனை’ என்றும் ’சோதனை மனைவியின் துணியை காய வைக்கவும் சோதனை’ என்றும் ’மான் குட்டி மாறி துள்ளி திரிந்த குழந்தையை புடிச்சு இப்படி உட்கார வச்சிட்டீங்களே என்றும், ’சிங்கத்தை இப்படி உட்கார வச்சிட்டிங்களே, என்ன கொடுமை சார் இது’ என்பது போன்ற பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com