தன் காதல் மனைவி இந்துக்காக பல கோடியில் பரிசளித்த பிரேம்ஜி.

  • IndiaGlitz, [Monday,June 10 2024]

 

இயக்குனர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட் பிரபுவின் சகோதரரான நகைச்சுவை நடிகர் பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் ஆனந்தமாக திருமணம் நடந்து முடிந்தது.நடிகர் பிரேம்ஜி என்னதான் படத்தில் நடித்து வந்தாலும் அவரது திருமணம் குறித்த கேள்விகள் மற்றும் சர்ச்சைகள் இருந்து கொண்டே இருந்தன.

இத்திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.அதனை தொடர்ந்து இந்து மற்றும் பிரேம்ஜி இருவரும் முருகன் கோவிலில் வழிப்பாட்டை மேற்கொண்டனர்.இவர்களை காண பக்தர்கள் பலரும் ஆர்வம் காட்டினார்.

திருமணத்தில் பிரேம்ஜியின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.மாப்பிள்ளை பிரேம்ஜிக்காக பெண் வீட்டார்கள் பல்வேறு விதமான கண் கவரும் சீர் வரிசைகளை குவித்து அசத்தியுள்ளனர்.42 வயது நிரம்பிய பிரேம்ஜிக்கு 22 வயதே ஆகிய இந்துவை திருமணம் செய்து வைத்ததைக் குறித்தும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.இது போன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது சேனலை பின்தொடரவும்.