யாஷிகாவின் டுவிட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேம்ஜி! காரணம் என்ன?

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை யாஷிகாவின் டுவிட்டை பார்த்து நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்

சமீபத்தில் நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்ஜே சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். நல்ல திறமையான நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து நான் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவரிடமிருந்து நான் பல அனுபவங்களை கற்றுக் கொண்டேன் என்றும் அவருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும், அவர் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்

யாஷிகாவின் இந்த டுவிட்டை பார்த்து தான் நடிகரும் இசையமைப்பாளரான பிரேம்ஜி தனது அதிர்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் இதுகுறித்த மீம்ஸ் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த ட்வீட்டுக்கு கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிகை யாஷிகா, ‘கடமையை செய்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.