ஒருவழியாக திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி.. மணமகள் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 30 2024]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு 45 வயது ஆகும் நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவருக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திருமண பத்திரிகை குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரேம்ஜிக்கு மனைவியாக வரப்போகிறவர் பெயர் இந்து என்றும் அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும் திருமண பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரேம்ஜி - இந்து திருமணம் ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறும் என்றும் திருமண விழாவில் அனைவரும் வருகை தர வேண்டும் என்றும் அந்த திருமண பத்திரிகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து 45 ஆண்டுகளாக பேச்சிலராக இருந்த பிரேம்ஜி தற்போது இல்லற வாழ்வில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருமண அழைப்பிதழ் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

என் லட்சுமிய காணும், கண்டுபிடிச்சு கொடுத்துங்க.. இல்லைன்னா.. விஜய்சேதுபதியின் 'மகாராஜா' டிரைலர்..!

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான 'மகாராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'இந்தியன் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா.. எங்கே? எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின்

பிரின்ஸ் துருவா சர்ஜாவின்  “மார்ட்டின்” திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும்  “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது

வருங்கால கணவரை தான் நடித்த திரைப்படத்திற்கு அழைத்து சென்ற தமன்னா.. வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா தனது வருங்கால கணவரை தான் நடித்த சூப்பர் ஹிட் படத்திற்கு அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

காவி உடையுடன் இமயமலையில் ரஜினிகாந்த்.. தேர்தல் ரிசல்ட்டை மறைமுகமாக சொல்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இமயமலை சென்ற நிலையில் தற்போது இமயமலையில் அவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.