திருத்தணி முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்ற பிரேம்ஜி - இந்து திருமணம்..!

  • IndiaGlitz, [Monday,June 10 2024]

40 வயதுக்கு மேலாக முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு நேற்று திருத்தணி முருகன் கோவிலில் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் குடும்பத்தினர் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகினர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மணமகன் பிரேம்ஜி, மணமகள் இந்து ஆகியோர் குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து உற்றார் உறவினர்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர்கள் சிவா, ஜெய், இயக்குனர் சந்தன பாரதி, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் மணமக்கள் முருகனை தரிசித்து வழிபட்ட நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகின்றன

More News

பதவியேற்ற மறுநாளே மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகல்? நடிகர் சுரேஷ் கோபி அதிர்ச்சி முடிவு..

நேற்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று திடீரென அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு விழா எப்போது? தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

தளபதி விஜய் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் மூன்று இடம் கிடைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசளித்தார் என்பது தெரிந்தது.

'கில்லி' ரீரிலீசை தொட முடியாத 'இந்தியன்'.. 10ல் ஒரு பங்கு தான் வசூல்..!

விஜய் நடித்த 'கில்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூலில் 10ல் ஒரு பங்கு தான் நேற்று முன்தினம் வெளியான கமல்ஹாசனின் 'இந்தியன்' படத்தின் ரீரிலீஸ் வசூல்

மோடி பதவியேற்பு விழா தினத்தில் கவுண்டமணியின் பதவியேற்பு விழா.. வைரல் போஸ்டர்..!

பிரதமராக மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்க இருக்கும் நிலையில் கவுண்டமணி நடித்த 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.

எல்லாமே வதந்தி.. யாரும் நம்பாதீங்க... 'காஞ்சனா 4' குறித்து ராகவா லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'காஞ்சனா 4' படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக சீதாராமன் படத்தில் நடித்த