இப்ப தான் திருமணம்.. அதற்குள்ளாகவா.. பிரேம்ஜியின் 'பேபி' பதிவு வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணம் ஆனது முதல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது தனது மனைவி தனக்கு முத்தம் கொடுத்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நடிகர் பிரேம்ஜி திருமணம் ஜூன் 9ஆம் தேதி நடந்தது என்பதும் ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவுக்கும் பிரேம்ஜிக்கும் திருத்தணி கோயிலில் மிக எளிமையாக திருமணம் நடந்தது என்பது தெரிந்தது. இந்த திருமணத்தில் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில திரையுலக பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்போது பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அவர் தனது மனைவி இந்து தனக்கு முத்த மழை பொழியும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் ’திருமணமாகி ஒரு மாதம் அதற்குள் ஆகிவிட்டது பேபி’ என்று அவர் தனது மனைவியை கொஞ்சிய நிலையில் ரசிகர்களின் அன்பு ஆசீர்வாதம் எங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கிறது, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன், உங்கள் அனைவர் அன்பினால் ஆதரவினால் எங்கள் சந்தோஷமான வாழ்க்கை நிரம்பி வழிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவியை பேபி என்று கொஞ்சி அழைத்த பிரேம்ஜியின் பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments