close
Choose your channels

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா.. முதல்முறையாக மாமியார் வீடு சென்ற பிரேம்ஜி.. வைரல் வீடியோ..!

Wednesday, September 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த ஜூன் மாதம் இந்து என்பவரை திருமணம் செய்த நிலையில் முதல் முறையாக தனது மாமியார் வீட்டுக்கு சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முரட்டு சிங்கிளாக பிரேம்ஜி இருந்த நிலையில் அவர் தனது 45 வது வயதில் தான் காதலித்த இந்து என்ற பெண்ணை கைப்பிடித்தார். திருத்தணி முருகன் கோவிலில் கடந்த ஜூன் 9ஆம் தேதி பிரேம்ஜி - இந்து திருமணம் நடந்தது என்பதும், இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கலந்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பிரேம்ஜி அவருடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர் சேலத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டுக்கு சென்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவின் பின்னணியில் ’புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடி’ என்ற பாடல் ஒலிக்க, பிரேமிஜிக்கு அவரது மாமியார் ஆரத்தி எடுத்து வரவேற்கும் காட்சிகள், பிரேம்ஜி அவரது மனைவியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருக்கும் காட்சிகள் உள்பட பல்வேறு ரொமான்ஸ் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட காமெடி கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment