பிரேம்ஜியின் வருங்கால மனைவி மீடியாவில் இல்லை ஓகே.. என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,June 08 2024]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜிக்கு நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரது வருங்கால மனைவி மீடியாவில் வேலை பார்ப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் சமீபத்தில் வெங்கட் பிரபு ஒரு அறிக்கை விட்டு அவர் மீடியாவில் வேலை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார். இந்த நிலையில் அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரேம்ஜி மற்றும் இந்து ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஜூன் 9ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற இருப்பதாக அழைப்பிதழ் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. மேலும் இது குறித்த செய்திகள் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தான் பிரேம்ஜியை திருமணம் செய்ய போகும் இந்து என்பவர் மீடியாவில் வேலை பார்க்கிறார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்த வெங்கட் பிரபு, ’மணமகள் இந்து மீடியாவில் வேலை பார்க்கவில்லை என்றும் இது எளிய முறையில் குடும்பத்தினரால் நடத்தப்படும் திருமணம் என்றும் இந்த திருமணம் குறித்த புகைப்படத்தை வரவேற்பு தினத்தில் வெளியிடுகிறோம் என்றும் வீட்டில் இருந்தபடியே பிரேம்ஜி - இந்து தம்பதியை வாழ்த்துங்கள்’ என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கசிந்த தகவலின் படி பிரேம்ஜியை திருமணம் செய்ய போகும் இந்து சேலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் சேலத்தில் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார் என்றும் தெரிகிறது. மேலும் இருவரும் எங்கு சந்தித்தார்கள் என்பது குடும்பத்தினருக்கே தெரியவில்லை என்றாலும் சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார்கள் என்றும் முதலில் இந்து தான் பிரேம்ஜியிடம் காதலை புரபோஸ் செய்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தான் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் இரு வீட்டில் தங்கள் காதலை கூறியதாகவும் அதன் பின்னர்தான் என் இரு வீட்டினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

More News

'பேபி கம் டவுன் கம் டவுன்' .. கர்ப்பிணி வயிற்றுடன் செம்ம டான்ஸ் ஆடும் அமலபாலா..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் தனது கர்ப்பிணி வயிற்றை ஒரு கையால் பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை

தீபாவளி ரேஸில் திடீரென இணைகிறதா வெற்றிமாறன் திரைப்படம்? ரசிகர்களுக்கு குஷி..!

2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ஏற்கனவே அஜித்தின் 'விடாமுயற்சி' மற்றும் சூர்யாவின் 'கங்குவா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்றும் அதேபோல் பிரதீப் ரங்கநாதனின் 'எல்ஐசி' மற்றும் கவின் நடித்த 'கிஸ்'

மருதமலையில் நடந்த அதிசயங்கள்..! : ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் விஜயகுமார், முருகனின் 7ம் படை வீடாக போற்றப்படும் மருதமலை முருகன் கோவில்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ப்ளாக்பஸ்டர்  'அரண்மனை 4'  திரைப்படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டர் இயக்குனர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை  ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.

என் பிள்ளைகள் காதலுக்கு பின் 2வது திருமணம்.. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகரின் முன்னாள் மனைவி..

பிரபல நடிகரை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை தனது குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்கு என்று ஒரு உலகம், அவர்களுக்கு என்று ஒரு காதல்,