close
Choose your channels

காதல் மனைவியை கட்டிப்பிடித்து போஸ்.. பிரேம்ஜி - இந்துவின் ஹனிமூன் புகைப்படங்கள் வைரல்..!

Monday, July 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த நிலையில் தற்போது பிரேம்ஜி - இந்து ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

40 வயதுக்கு மேலாக முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் ஹனிமூன் சென்றுள்ள பிரேம்ஜி - இந்து தம்பதிகள் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தொகுத்து தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இருவரும் கட்டிப்பிடித்து ரொமான்ஸோடு இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடவுள் உங்களை இவ்வளவு நாள் காக்க வைத்தது, இப்படி ஒரு தேவதையை துணையாக கொடுக்கவே’ என்றும், ‘என் தலைவனை இப்படி பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? என்றும் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.