நீண்ட இடைவேளைக்குப் பின் சிம்பு படத்தில் பாடல் பாடும் பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மூன்று நாட்கள் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இந்த படத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சூப்பரான பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாகவும் இதுவரை அவர் கம்போஸ் செய்த பாடல்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ’மாநாடு’ பாடல்கள் அனைத்தையும் தான் கேட்டதாகவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிம்புவின் ’மாநாடு’ படத்தில் பிரேம்ஜி அமரன் ஒரு பாடலை பாடியிருப்பதாக அவரும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் பாடகராக மீண்டும் அவதாரம் எடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ’பிரியாணி’ படத்தில் இடம்பெற்ற மிசிசிப்பி என்ற பாடலைப் பாடிய பிரேம்ஜி அதன்பின் தற்போதுதான் ’மாநாடு’ படத்தில் ஒரு பாடலை பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Just sang one amazing song for my musical guru @thisisysr after so many years ?????? pic.twitter.com/MdRrI6cji7
— PREMGI (@Premgiamaren) February 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com