ஒருவழியாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட பிரேம்ஜி.. அவரே செய்த பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் 44 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாத நிலையில் இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடக்கும் என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மகன்களின் ஒருவரான பிரேம்ஜி அமரனுக்கு தற்போது 44 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிக்க பெண் பார்த்ததாக அவரது குடும்பத்தினர் கூறிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது தாயார் மறைவு காரணமாக பெண் பார்க்கும் படலம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு தனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவரது பதிவை ரசிகர்கள் நம்பாமல் இதையேதான் ஐந்து வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர். 44 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Happy new year. This year I am getting married. Dot.
— PREMGI (@Premgiamaren) January 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments