80 வயது கிழவியிடம் மோதும் பிரேம்ஜி அமரன்!
- IndiaGlitz, [Saturday,December 21 2019]
நடிகர் பிரேம்ஜி ஹீரோவாக நடிக்க உள்ள ஒரு படத்தில் 80 வயது கிழவி வில்லியாக நடிக்க உள்ள செய்தி தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கும் அடுத்த படத்தில் பிரேம்ஜி அமரன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரேம்ஜி ஜோடியாக வெப்சீரியல்களில் நடித்து வரும் சுவாயம் சித்தா என்பவர் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் ரேஷ்மா உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முற்றிலும் கிராமத்து பின்னணியில் அமையவிருக்கும் இந்த படத்தில் கிராமத்து இளைஞராக பிரேம்ஜி நடிக்கவிருப்பதாகவும், தற்செயலாக அவருக்கு நடக்கும் ஒரு விபரீதம் அந்த கிராமத்தையே எப்படி பாதிக்கிறது என்பதை நகைச்சுவையுடன் கூறும் கதை தான் இந்த படத்தின் கதை என்றும் இயக்குனர் சுரேஷ் சங்கையா தெரிவித்துள்ளார்
மேலும் ஒரு பல படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ள மாயாக்கா என்ற 80 வயது கிழவி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரை சமாளிக்க முடியாமல் பிரேம்கி அமரன் திணறுவது தான் இந்த படத்தின் ஹைலைட் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு அருப்புக்கோட்டையில் நாளை முதல் நடைபெறுவதாகவும் முதல்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்தோணிதாசன் இசையில் ஆர்வி சரண் ஒளிப்பதிவில் இந்த படம் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது