சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு

  • IndiaGlitz, [Sunday,November 06 2016]

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தின் நாயகனாக சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சிம்புவை சந்தித்த அல்போன்ஸ் புத்திரன் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதை சிம்புவை வெகுவாக கவர்ந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் தயாரிக்கப்படவுள்ளதாகவும் பிரேமம் போன்று இது காதல் கதை இல்லை என்றும் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையா' திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.