விஜய் 60'யில் இணைந்த 'பிரேமம்' பிரபலம்

  • IndiaGlitz, [Monday,March 07 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்தபடமான 'விஜய் 60' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்திசுரேஷ், சதீஷ் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டிசைனராக Tuney John என்பவர் நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூகவலைத்தளத்தில் உறுதிசெய்துள்ளார்.

ஏராளமான தமிழ், மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இவர் போஸ்டர் டிசைன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணை தாண்டி வருவாயோ, பீட்சா, அஞ்சான், ஜில்லா, மெட்ராஸ், கோ, ஜிகர்தண்டா, மற்றும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிரேமம்' ஆகியவை இவர் டிசைன் செய்த படங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

விஜய் 60' படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் ஏற்கனவே அறிந்ததே

More News

ஜூனியர் என்.டி.ஆர் இடத்தை பிடித்தார் சிம்பு

சிம்பு நடித்து முடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் 'இது நம்ம ஆளு' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாகும்

குத்துச்சண்டை வீராங்கனையாகும் கீதாஞ்சலி நாயகி

கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆன 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தின் நாயகி வாமிகா கபியின் நடிப்பு குறிப்பிட்டு பேசப்பட்டது...

உதயநிதி படத்தில் இணைந்த இருபெரும் இசையமைப்பாளர்கள்

கடந்த பொங்கல் தினத்தில் உதயநிதி நடித்த 'கெத்து' திரைப்படம் ரிலீஸாகிய நிலையில் அவருடைய அடுத்தபடமான 'மனிதன்'...

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் விஜய் நாயகி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டால் அடுத்தது அவர்களுடை கனவு விஜய் அல்லது அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்....

ஸ்ருதிஹாசன் பாணிக்கு மாறும் த்ரிஷா

பழம்பெரும் நடிகைகளான கே.பி.சுந்தரம்பாள், பானுமதி, வரலட்சுமி உள்பட ஒருசில நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது மட்டுமின்றி பாடல்களையும் அவர்களே பாடுவார்கள்.