விஜய் 60'யில் இணைந்த 'பிரேமம்' பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்தபடமான 'விஜய் 60' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்திசுரேஷ், சதீஷ் உள்பட பலர் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டிசைனராக Tuney John என்பவர் நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூகவலைத்தளத்தில் உறுதிசெய்துள்ளார்.
ஏராளமான தமிழ், மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இவர் போஸ்டர் டிசைன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணை தாண்டி வருவாயோ, பீட்சா, அஞ்சான், ஜில்லா, மெட்ராஸ், கோ, ஜிகர்தண்டா, மற்றும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிரேமம்' ஆகியவை இவர் டிசைன் செய்த படங்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
விஜய் 60' படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் ஏற்கனவே அறிந்ததே
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com