அஜித் படத்தில் நடித்திருக்கின்றாரா 'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன்?

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

அஜித் நடித்த ’தீனா’ படத்தை அவரது ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அஜித்தை முதன் முதலாக ஆக்ஷன் ஹீரோவாக்கியது இந்த படம்தான் என்பதும், அது மட்டுமின்றி ரசிகர்கள் அஜித்தை ‘தல’ என்று அன்போடு அழைக்க ஆரம்பித்தது இந்த படத்திற்கு பின்னர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ஏஆர் முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான படம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று பிரபலமாக இருக்கும் ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ’தீனா’ படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அஜித், லைலா ஆகிய இருவரும் பீட்சா சாப்பிடும் போது ஒரு கும்பலால் கிண்டல் செய்யப்படுவார்கள். அந்த கும்பலில் உள்ள ஒருவர் தான் அல்போன்ஸ் புத்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அல்போன்ஸ் புத்திரன் தமிழில் சில குறும்படங்கள் இயக்கி உள்ளார் என்பதும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ’பிரேமம்’ என்ற படத்தை இயக்கி தென்னிந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கலாச்சாரத்தை சீரழிக்கிறார்கள்..! சாதனா, ஜிபி. முத்து மீது காவல் நிலையத்தில் புகார்...!

இணையத்தில் பிரபலமாக இருப்பவர்களான டிக்டாக் சாதனா, ஜிபி முத்து, சூர்யா, சிக்கா மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு!

உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிராக அதே தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார்.

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இணையதளங்களில் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரவுசு செய்யும் ரவுடி பேபி சூர்யா....! ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்....!

சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

"டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்" எப்படி பரவியது...?

இந்தியாவில் உள்ள டெல்டா வைரஸின், ஸ்பைக் புரோட்டினில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தான், இதை டெல்டா பிளஸ் என கூறுகிறார்கள்