காதலிக்கிறவனுக்கு கண்ணு மட்டுமில்லை, அறிவும் கிடையாது: 'பிரேமலு' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்ததும் என்பதும் தெரிந்தது. மேலும் இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 3 கோடி என்ற நிலையில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததை பார்த்து இந்திய திரை உலகமே ஆச்சரியத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் 150 கோடி என்ற வசூலை தொட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ‘பிரேமலு’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கிரிஷ் இயக்கத்தில் நஸ்லென், மமீதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசை அமைத்துள்ளார். முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்ட இந்த படம் ஜாலியாக இருப்பதை பார்த்தால் தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை அள்ளி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர் ஒருவர் தற்செயலாக பார்த்த பெண்ணை காதலிக்க, அந்த பெண்ணை பெண்ணிடம் காதல் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அந்த பெண் வேறொருவரை தனது வருங்கால மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார். இதனை அடுத்து அந்த இளைஞர் தான் காதலித்த பெண்ணை தன் வசம் கொண்டுவர என்ன செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என தெரிகிறது.
இந்த படத்தின் வசனங்கள் ஜாலியாகவும் காமெடியாகவும் உள்ளது என்பது ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக ‘உன்னை கல்யாணத்தில் பார்க்கும்போது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. உன் கூட டைம் செலவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ரிஸ்க் எடுத்து சென்னை வந்தேன்’ என தூங்கி கொண்டிருக்கும் காதலியிடம் காதலன் பேசும் வசனம், ’காதலிக்கிறவனுக்கு கண்ணு மட்டும் இல்ல அறிவும் கிடையாது’ என்று ஹீரோவின் நண்பர் கூறும் வசனம் ஆகியவற்றை சொல்லலாம்,
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments