கமல்ஹாசன் கொடுத்த பெரிய ஆஃபர்.. ஆனாலும் 'பிரேமலு' இயக்குனரின் அதிரடி முடிவு..!

  • IndiaGlitz, [Monday,May 13 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் தனது நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை ‘பிரேமலு’ இயக்குனருக்கு கொடுத்த நிலையில் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘பிரேமலு’ என்ற வெற்றி படத்தை இயக்கிய கிரிஷ் என்ற இயக்குனருக்கு தமிழ் திரை உலகில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுக்க கூட ஒரு சில தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கி தருமாறு ‘பிரேமலு’ இயக்குனரிடம் கேட்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலகில் வாய்ப்பு ஏற்றுக் கொள்ளாமல் அவர் மீண்டும் ‘பிரேமலு’ தயாரிப்பாளருக்கு ஒரு படத்தை இயக்கி தர முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ் திரையுலகினர் கொடுப்பதாக கூறிய சம்பளத்தை விட மிகக் குறைந்த சம்பளத்தையே அவர் ’பிரேமலு’ தயாரிப்பாளரிடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ‘பிரேமலு’ படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த புதிய படத்தில் இணைந்து கொள்வார்கள் என்றும் 'I AM காதலன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்போதைக்கு தமிழ் பக்கம் இயக்குனர் கிரிஷ் வரமாட்டார் என்றாலும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அவர் தமிழ் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.