ஹாட்ஸ்டாரில் ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான 'பிரேமலு'.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,April 09 2024]

தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான பிரேமலு ஏப்ரல் 12 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. மேலும் மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

கிரிஷ் AD இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவை சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நம்மை ஒரு அழகான பயணத்திற்கு கூட்டி செல்கிறது.

நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மை பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். ஜேகேயாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார். மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ் ஒரு அழகான கேமியோவாக பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சியாம் புஷ்கரன் சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், கலக்கலான ரொமான்ஸ் காமெடி திரைப்படமான பிரேமலு படத்தைக் தமிழில் கண்டுகளியுங்கள்.

 

More News

கணவருடன் சென்று பாஜகவில் இணைந்த பிக்பாஸ் தமிழ் நடிகை.. அண்ணாமலையுடன் புகைப்படம்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் காமெடி நடிகை தனது கணவருடன் சென்று பாஜகவில் இணைந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய்சேதுபதியின் 50வது படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

விஜய்சேதுபதியின்  50வது படமான 'மகாராஜா' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளதாகவும்

தமிழ் திரையுலகில் ஹீரோவாகும் பிக்பாஸ் சீசன் 7 பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒருவர் தற்போது தமிழ் திரையுலகின் ஹீரோவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை: பெரும் பரபரப்பு..!

இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 படங்களையும் முடித்துவிட்ட கார்த்தி.. அடுத்தது சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம் தான்..!

நடிகர் கார்த்தி தற்போது தான் நடித்துக் கொண்டிருந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.