ஒரே ஒரு வெற்றிப்படம் தான்.. சன்னி லியோன் ரேஞ்சுக்கு குவிந்த கூட்டம்.. சென்னையில் மமிதா பாஜூ..!

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

மலையாள நடிகை மமிதா பாஜு ’பிரேமலு’ என்ற ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்த நிலையில் அவர் சமீபத்தில் சென்னை வந்த போது அவருக்கு சன்னி லியோன் ரேஞ்சுக்கு அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மமிதா பாஜு மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடித்து வந்தாலும் அவருக்கு ’பிரேமலு’ என்ற படம் தான் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்பதும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சேர்த்து 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜிவி பிரகாஷ் நடித்த ’ரிபெல்’ என்ற தமிழ் படத்தில் மமிதா பாஜு நடித்த நிலையில் தற்போது அவர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தில், அதன் பின்னர் அதர்வா நடிக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த மமிதா பாஜுவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகர்களின் கூட்டத்திலிருந்து மமிதா பாஜுவை காவல் துறையினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் கஷ்டப்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’பிரேமலு’ என்ற ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்த மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆகியுள்ள மமீதா பாஜுவை பார்க்க சென்னையில் சன்னி லியோன் ரேஞ்சுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் கூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.