close
Choose your channels

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் 'பிரேமலு' நாயகனா? வேற லெவல் தகவல்..!

Friday, May 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து வரும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த படத்தில் நயன்தாரா, ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. அதேபோல் இந்த படத்தின் வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு வில்லன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ’பிரேமலு’ படத்தில் நாயகனாக நடித்த நஸ்லீன் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக நஸ்லீன் நடிப்பது உறுதி செய்யப்படும் என தெரிகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், அபிநந்தம் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் இன்னும் சில ஆச்சரியமான ஸ்டார்கள் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment