பேசுவதற்கு முன் சிந்தித்து பேச வேண்டும்: கமல்ஹாசனுக்கு பிரேமலதா அறிவுரை
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சைக்குரியதாக மாறி இந்த பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது. கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, புகழேந்தி, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கமல் பேசியது சரி என்று கூறி வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, விவேக் ஓபராய் போன்றோர் கமலின் பேச்சை கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கூறியபோது, 'கமல்ஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பிறப்பால் அவர் ஒரு இந்து. மதரீதியான கருத்துகளை பேசும் போது யாராக இருந்தாலும் சிந்தித்துப்பேச வேண்டும். எந்த மதத்தையும் தரக்குறைவாக பேசினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.
மேலும் கமல் கூறிய கருத்து பிறருடைய மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. அது தவறானது. யாரும் மதத்தால் யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது, இது அனைத்து மதத்திற்குமே பொருந்தும்' என்று பிரேமலதா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments