'பீஸ்ட்' படத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ’பீஸ்ட்’ படத்திற்கு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் நேற்று வெளியாகியது என்பதும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் காட்டுவதாக ஏற்கனவே குவைத், காத்தார் ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன என்பதும், தமிழகத்தில் கூட இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘’பீஸ்ட்’ படத்தை தான் இன்னும் பார்க்கவில்லை என்றும் இருப்பினும் அந்த படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளாக காட்டப்பட்டு இருப்பார்கள் என பிரேமலதாவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments