விஜயகாந்த் உடல்நிலை நிலவரம்; பிரேமலதா வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.விஜயகாந்த் பூரண நலமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு கோவில்களில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தேமுதிக சொந்தங்கள் மற்றும் கேப்டன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.
மருத்துவமனை நிர்வாகம் நேற்று கொடுத்த அறிக்கை வழக்கமான மருத்துவமனை அறிக்கை தான், பதட்டப்படும் அளவுக்கு கேப்டனுக்கு எதுவும் இல்லை. எனவே தொண்டர்கள் அதனால் பயப்பட வேண்டாம். கேப்டன் அவர்கள் உடல் நலத்துடன் ஆரோக்கியமுடன் இருக்கிறார்.
மருத்துவர்கள், மருத்துவர் நிர்வாகம் அவரை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர், நானும் அவரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தலைவர் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார். மேலும் அனைவரது பிரார்த்தனை மற்றும் அவர் செய்த தர்மம் அவரை நிச்சயம் காப்பாற்றும். எனவே தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம், நான் கூடவே இருந்து அவரை பார்த்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Immerse Yourself in the Melodies of Vijayakanth!
Dive into the soulful tunes and timeless classics by Vijayakanth. Click the link below to access a curated compilation of his greatest hits!
கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்.
— Vijayakant (@iVijayakant) November 29, 2023
- திருமதி. பிரேமலதா விஜயகாந்த் pic.twitter.com/P9iHyO7hzG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments