திரைப்படங்களில் கேப்டன் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால்? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து உள்ளிட்ட சில படங்களில் விஜயகாந்த் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து என்ற கேரக்டரில் நடித்த அட்டக்கத்தி தினேஷ், விஜயகாந்த் ரசிகராக நடித்திருப்பார். அது மட்டுமின்றி, இந்த படத்தில் விஜயகாந்த் நடித்த பொன்மனச் செல்வன் படத்தின் பாடலும், போஸ்டர்களும் காட்சிகளில் காணப்பட்டுள்ளன. விஜயகாந்தின் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் திரையரங்கமே அதற்கான ஆரவாரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரைப்படங்களில் கேப்டனின் பாடல்கள், போஸ்டர்கள் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திரைப்படங்களில் கேப்டனின் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால், காப்புரிமை பற்றி யாரிடமும் நாங்கள் கேட்க மாட்டோம். கேப்டன் எங்கள் சொத்து அல்ல, மக்களின் சொத்து என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, இனி வரும் படங்களில் விஜயகாந்த் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சமீபத்தில் வெளியான விஜய்யின் ”கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்தின் ஏஐ தோற்றம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது தெரிந்தது.

More News

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்வி.. ரஜினிகாந்த் கூறிய பதில் என்ன தெரியுமா?

திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த கேள்விக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய பதில் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

துரத்தி கொண்டே வந்த ரசிகர்.. வார்னிங் செய்த பிரியங்கா மோகன்.. என்ன நடந்தது?

நடிகை பிரியங்கா மோகன் தன்னை துரத்திக் கொண்டே வந்த ரசிகரை எச்சரிக்கை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எல்லா விஷயமும் 'புஷ்பா' இயக்குனருக்கு தெரியும: ஜானி மாஸ்டர்

பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'தேவாரா? ஒரே நாளில் இத்தனை கோடியா?

ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு

பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்.. பார்வையாளர்கள் அதிருப்தி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சில சீரியல்களை விஜய் டிவி நிர்வாகம் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.