திரைப்படங்களில் கேப்டன் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால்? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான "லப்பர் பந்து" உள்ளிட்ட சில படங்களில் விஜயகாந்த் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான "லப்பர் பந்து" திரைப்படத்தில் "கெத்து" என்ற கேரக்டரில் நடித்த அட்டக்கத்தி தினேஷ், விஜயகாந்த் ரசிகராக நடித்திருப்பார். அது மட்டுமின்றி, இந்த படத்தில் விஜயகாந்த் நடித்த "பொன்மனச் செல்வன்" படத்தின் பாடலும், போஸ்டர்களும் காட்சிகளில் காணப்பட்டுள்ளன. விஜயகாந்தின் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் திரையரங்கமே அதற்கான ஆரவாரம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரைப்படங்களில் கேப்டனின் பாடல்கள், போஸ்டர்கள் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "திரைப்படங்களில் கேப்டனின் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால், காப்புரிமை பற்றி யாரிடமும் நாங்கள் கேட்க மாட்டோம். கேப்டன் எங்கள் சொத்து அல்ல, மக்களின் சொத்து" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இனி வரும் படங்களில் விஜயகாந்த் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, சமீபத்தில் வெளியான விஜய்யின் ”கோட்’ திரைப்படத்தில் விஜயகாந்தின் ஏஐ தோற்றம் பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது தெரிந்தது.
🔥🔥🔥#CaptainVijayakanth #LubberPandhu #HBDDinesh pic.twitter.com/mwACklXpOM
— 🔥என்றும்தமிழன்🔥 (@tamilan_mj) September 28, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout