விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? சற்றுமுன் பிரேமலதா வெளியிட்ட புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,December 02 2023]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் இயக்குனர் ஆர்கே செல்வமணி நேரில் சென்று விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியானது.

மேலும் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் திடீரென பாதுகாப்பு அதிகரித்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் சற்றுமுன் ஒரு புகைப்படத்தை பிரேமலதா வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார், தயவுசெய்து யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்றும் பிரேமலதா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விஜயகாந்த் சிகிச்சையில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் விஜயகாந்த் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.