விஜயகாந்துக்கு முடிவெட்டி, ஷேவிங் செய்த பிரேமலதா: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், ஊரடங்கு உத்தரவு காரணமாக முடிவெட்டாமல், ஷேவ் செய்யாமல் இருந்ததை அடுத்து அவருடைய மனைவியே அவருக்கு முடிவெட்டி ஷேவ் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜயகாந்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் முதலில் விஜயகாந்துக்கு முடிவெட்டிவிடும் பிரேமலதா, அதன் பின் டை அடித்து, ஷேவிங் செய்து, கால் கை, நகங்களை சுத்தப்படுத்தினார். அதன்பின் கால்களுக்கு க்ரீம் தடவும்போது கால்களில் உள்ள காயங்களை எல்லாம் காண்பித்து ‘இது ஒவ்வொன்றும் சினிமா படப்பிடிப்பு சண்டைக்காட்சியின்போது ஏற்பட்ட காயங்கள் என்றும். என் கணவரின் வீரத்தழும்புகள் என்றும் கூறுகின்றார். மேலும் தனது கணவருக்கு முடிவெட்டிவிடுவது இதுபுதியது அல்ல என்றும் அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சை பெற்றபோது ஏற்கனவே முடிவெட்டி இருப்பதாகவும் தெரிவித்தார்.
முடிவெட்டி, ஷேவிங் செய்து, டை அடித்து கடைசியில் ஜம்மென்று விஜயகாந்த் ஒரு குழந்தைத்தனமாக சிரிப்பதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை விஜயகாந்தின் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவின் பின்னணியில் ‘வானத்தை போல’ படத்தின் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் பாடிக்கொண்டிருந்தது பொருத்தமானதாக கருதப்படுகிறது.
கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...! #CORONA | #COVID19 | #lockdown | #Stayhome | #Staysafe pic.twitter.com/y1KGHQgaEK
— Vijayakant (@iVijayakant) April 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments