விஜயகாந்த் கட்சியில் பிரேமலதாவுக்கு புதிய பதவி

  • IndiaGlitz, [Friday,October 19 2018]

விஜயகாந்த்தின் அரசியல் கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் விஜயகாந்த் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த கட்சியின் பொருளாளராக விஜயகாந்த் மனைவி பிரேமலதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கட்சியின் எந்த பொருப்பிலும் இல்லாமல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே பிரேமலதா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இதுவரை தேமுதிகவின் பொருளாளராக இருந்த இளங்கோவன் தற்போது அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல கொள்கை பரப்பு செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார் திமுகவில் இணைந்த‌தால், அந்த பதவிக்கு அழகாபுரம் மோகன்ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளில் விஜயகாந்தும் அவருடைய மனைவியும் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.