விஜய் ஆண்டனி திரைப்படத்தில் விஜயகாந்த் நடிப்பது உண்மையா? பிரேமலதா விளக்கம்!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிவரும் திரைப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த செய்திக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கி வரும் திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாகவும் விஜயகாந்த் வீட்டிலேயே படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ’விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது’ என்றும் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ உள்பட எந்த படத்திலும் விஜயகாந்த் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.