எம்.ஜி.ஆர் பாடலா? சிவாஜி பாடலா? குழப்பத்தில் பிரேமலதா
- IndiaGlitz, [Wednesday,March 27 2019]
அதிமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் பெரும் சர்ச்சைக்கு பின் இணைந்த தேமுதிக வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட நான்கு தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்றது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரேமலதா, 'விஜயகாந்த் அவர்களுக்கு தற்போது பேசும் பயிற்சியை மருத்துவர்கள் கொடுத்து வருவதாகவும் அப்போது அவர் பாடல்களை பாடி பயிற்சி பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் பேசும் பயிற்சி எடுக்கும்போது கூட விஜயகாந்த், புரட்சி தலைவர் எம்ஜிஆர் பாடல்களை மட்டுமே பாடுவதாகவும், குறிப்பாக 'ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்ற பாடல் தான் அவருக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாடல் என்றும் கூறினார்.
உண்மையில் இந்த பாடல் சிவாஜி கணேசன் நடித்த 'பச்சை விளக்கு' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் ஆகும்,. எம்ஜிஆர் பாட்டுக்கும் சிவாஜி பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத தலைவராக பிரேமலதா இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.