close
Choose your channels

'கேடி தி டெவில்” 'கேஜிஎஃப்', 'காந்தாரா'வை அடுத்து இன்னொரு பான் இந்தியா படம்!

Saturday, October 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக கன்னட திரைப்படங்கள் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக ’கேஜிஎ’ப் மற்றும் ‘காந்தாரா’ ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ’கேடி’ என்ற கன்னட திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. துருவா சார்ஜா நடிப்பில் பிரேம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சஞ்சய்தத் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூரில் நடந்த நிலையில் அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

’கேடி’ டீசர் வெளியீட்டு விழாவில் இந்த படத்தின் இயக்குனர் பிரேம் பேசியபோது, ‘இந்த படம் ஒரு ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல காதல் மற்றும் அறம் கலந்த கதை என்றும் ’கேஜிஎப்’ மற்றும் ’புஷ்பா’ படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் நாயகன் துருவா சர்ஜா கூறும்போது, ‘சஞ்சய் தத் ஒரு லெஜண்ட் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘கேடி’ படம் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ரசிகர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று தெரிவித்தார்.

சஞ்சய்தத் பேசும்போது ’இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி! நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் அதிகமாக வேலை செய்யப்போகிறேன் என்று கூறினார்.

இந்த படத்தின் டீஸர் தற்போது இணையதளங்களில் வைரலாக இருக்கிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment