close
Choose your channels

ஷாருக்கானையே வாங்கிட்டோம்! வைரலாகும் ப்ரீத்தி சிந்தாவின் க்யூட் ரியாக்ஷன்ஸ்!

Friday, February 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சையத் முஷ்டக் கோப்பை போட்டிக்கான முடிவுகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்ல வேண்டும். காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து எந்தவொரு அணியும் கண்டுகொள்ளாத புஜாராவை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்து இருக்கிறது. இவர் கடந்த ஆண்டு சையத் முஷ்டக் போட்டியில் 66 பந்துகளுக்கு சதம் அடித்து இருந்தார்.

அதேபோல இந்த ஆண்டு சையத் முஷ்டக் போட்டியின்போது தமிழக அணியில் இடம்பெற்ற இளம் வீரர் ஷாருக்கான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். களத்தில் நின்று அசராமல் 88 ரன்களை எடுத்த இவரை பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். இதனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் என 3 அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்கப் போட்டிப் போட்டன. இந்தப் போட்டியில் ரூ.5.25 கோடி விலைக் கொடுத்து ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி  ஏலத்தில் எடுத்து உள்ளது.

இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி சிந்தா, அருகில் இருந்த கொல்கத்தா அணி அதிகாரிகளைப் பார்த்து பார்த்தீங்களா? ஷாருக்கானையே வாங்கிவிட்டோம் என க்யூட் ரியாக்ஷன் கொடுத்தார். காரணம் கொல்கத்தா அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக இளம் வீரரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சிந்தா ஏலத்தில் எடுத்து உள்ளார். அதனால் இவர் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. தமிழக வீரரான ஷாருக்கான இதுவரை 31 உள்நாட்டு டி20 தொடர் போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளார். அதில் 293 ரன்களையும் குவித்து தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணி இவரை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment