8 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் மருத்துவ சேவை செய்த நடிகரின் மனைவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போதும் பொதுமக்களுக்கு தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வந்த பிரபல தமிழ் நடிகர் ஒருவரின் மனைவியை சமூகவலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்
தமிழில் ’பசஙக’, ‘களவாணி’, கலகலப்பு’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிக விமல். விமல் இவர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தன்னுடைய சொந்த ஊரில் தன்னார்வ இளைஞர் சிலருடன் சேர்ந்து கிருமி நாசினி தெளித்து வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் நடிகர் விமல் மனைவி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த போதும் பொதுமக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்ததாகவும், அவருக்கு நிறைமாதம் நெருங்குவதை அடுத்து மருத்துவ நிர்வாகமே அவருக்கு விடுமுறை கொடுத்து அனுப்பியதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து விமலின் மனைவியை விடுமுறைக்கு அனுப்பும் போது மருத்துவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கர்ப்பிணியாக இருந்தும் அவர் செய்து சேவைக்கு பாராட்டு தெரிவித்தனர். இது தனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்ததாக நடிகர் விமல் கூறியுள்ளார். விமல் மனைவின் சேவை மனப்பான்மையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com