எழுந்து நின்று பாட மறுத்ததால் 8 மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக்கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தானில் அற்ப காரணங்களுக்காக துப்பாக்கி சூடு நடத்துவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் மேடையில் உட்கார்ந்து கொண்டு பாடியதால் ஆத்திரமடைந்த ஒருவர் பாடகியை சுட்டு கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள லர்கானா என்ற பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பாட சமீரா சிந்து என்ற பாடகி வந்திருந்தார். அவர் எட்டுமாத கர்ப்பிணியாக இருந்ததால் உட்கார்ந்து கொண்டே பாடல்களை பாடினார். அவர் பாடிய பாடல்களை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ரசித்து கேட்டு கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் உட்கார்ந்து கொண்டு பாட வேண்டாம், எழுந்து நின்று பாடு என்று கூச்சலிட்டார். ஆனால் சமீரா தான் கர்ப்பமாக இருப்பதால் நீண்ட நேரம் எழுந்து நிற்க முடியாது என்று கூறிக்கொண்டிருந்தார்
இதனை ஏற்காத அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாடகியை நோக்கி சுட்டார். இதில் அந்த பாடகி மேடையிலேயெ உயிரிழந்தார். இதனை கண்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் பாடகியை சுட்டு கொலை செய்தவர் தாரிக் ஜதோய் என்பவர் என தெரிந்தது. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேடையில் பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது கர்ப்பிணி பாடகி ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments