ஆண் குழந்தைக்காகக் கர்ப்பிணி செய்த காரியம்… அதிர்ந்துபோன மருத்துவர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு தன் தலையில் தானே ஆணி அடித்துக் கொண்டுள்ளார். இது விபரீதத்தில் முடிந்ததால் பலரும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
பெஷாவர் பகுதியில் வசித்துவரும் இளம்பெண்ணிற்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவர் 4 ஆவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் கர்ப்பத்தில் இருப்பது ஆணா? என்பதை அறிய ஸ்கேன் செய்தும் பார்த்திருக்கிறார். அதிலும் அவருக்கு ஏமாற்றம் ஏற்படவே அருகிலுள்ள ஒரு மந்திரவாதியை சந்தித்துள்ளார். அந்த மந்திரவாதி ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் தலையில் ஆணி அடித்துக்கொள்ள வேண்டும் என்று கூற அந்தப் பெண்ணும் வீட்டிற்கு வந்தபிறகு ஒரு ஆணியை எடுத்து தன் தலையில் அடித்துக் கொண்டுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த அந்தப் பெண் ஆணியை பிடுங்க முயற்சித்து இருக்கிறார். ஆனால் ஆணி ஆழமாக இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள் 2 இன்ஸ் ஆழத்தில் இருந்த ஆணியை அகற்றியுள்ளனர். மேலும் இது சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறிய நிலையில் அந்தப் பெண் அங்கிருந்து உடனடியாகத் தப்பித்துச் சென்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த பெண்ணையும் மந்திரவாதியையும் தேடிவருவதாகக் கூறப்படுகிறது. ஆண் குழந்தைக்காகக் கர்ப்பிணிப் பெண் தலையில் ஆணி அடித்துக் கொண்ட சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com