நிறைமாத கர்ப்பத்துடன் காதலர் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை!
- IndiaGlitz, [Saturday,September 07 2019]
நடிகை எமிஜாக்சன் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் இந்த மாதம் அவருக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது தனக்கு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதையும் அவர் தெரிவித்திருந்தார் என்பதையும் ஏற்க்னவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று எமிஜாக்சனின் காதலரும் விரைவில் எமியை திருமணம் செய்யப்போவருமான ஜார்ஜின் 32வது பிறந்த நாள். இன்றைய பிறந்த நாளுக்காக எமிஜாக்சன் தனது வீட்டை வித்தியாசமாக அழகுபடுத்தி காதலர் ஜார்ஜை அழைத்து வந்து ஆச்சரியப்படுத்தினார். எமியும் அவருடைய குடும்பத்தினர்களும் ஜார்ஜ் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
ஜார்ஜூக்காக ஸ்பெஷல் காலைவிருந்தை தானே தயார் செய்த எமிஜாக்சன், தனது காதலருக்காக பரிமாறியும் உள்ளார். மேலும் காலை உணவு இருக்கும் டேபிளில் பிறக்கப்போகும் குழந்தையின் ஸ்கேன் புகைப்படங்களையும் அவர் ஜார்ஜ் பார்வைக்கு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு வருடங்களாக காதலர்களாக இருக்கும் ஜார்ஜ்-எமிஜாக்சன் வரும் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் திருமணம் இத்தாலி அல்லது கிரீஸ் நாட்டில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.