கர்ப்பம் குறித்த வதந்திக்கு நஸ்ரியாவின் நச் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,June 15 2017]

'நேரம்', ராஜா ராணி' உள்பட ஒருசில தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தாலும் நல்ல நடிகை என்ற பெயர் வாங்கியவர் நஸ்ரியா. ஆனால் திடீரென மலையாள நடிகர் ஃபகத்பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று நஸ்ரியா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், பகத்பாசில்-நஸ்ரியா தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் மிக வேகமாக பரவியது.

இந்த நிலையில் தனது கர்ப்பம் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகத்திற்கு நஸ்ரியா காட்டமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஒரு செய்தியை வெளியிடும் முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொண்டு வெளியிடுங்கள். உங்கள் செய்தியால் எனக்கு பதில் சொல்ல நேரம் இல்லாத அளவிற்கு போன் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. ஒருமுறைக்கு இருமுறை செய்தியை உறுதிப்படுத்தி கொண்டு வெளியிடுங்கள்' என்று நச்சென்றும் நாகரீகமாகவும் தனது விளக்கத்தை அளித்துள்ளார்.