உலகத்திலேயே பிரசவ வலி தான் மிகப்பெரியது: நடிகை சமந்தா
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகத்திலேயே பிரசவ வலிதான் மிகப்பெரியது என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்த போது, ‘சமந்தா குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்க்கவே விவாகரத்து செய்வதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டினர். இது பெரும் சர்ச்சையான நிலையில் சமந்தா இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா அளித்த பேட்டியில் பெண்களின் பிரசவ வலி குறித்து கூறியபோது, ’பெண்கள்தான் மிகவும் வலிமையானவர்கள். உலகிலேயே மிகப்பெரிய வலி உடையது பிரசவம் தான் என்றும் ஆனால் அந்த வலியையும் ஒரு பெண் தாங்கிக் கொண்டு குழந்தை பெறுகிறார் என்றும் ஆனால் அதே நேரத்தில் தான் பெற்ற குழந்தையை ஒருதாய் பார்த்தவுடன் தனது வலி எல்லாம் மறந்து அந்த பெண்ணின் முகத்தில் சிரிப்பு உண்டாகும் என்றும் அதற்கு ஈடு இணையே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
தாய்மை குறித்து இவ்வளவு அழகாக புரிந்து வைத்துள்ள சமந்தாவின் இந்த கருத்து அவர் குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தவர் என்று கூறியவர்களுக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com