நீரிழிவு நோய்க்கும் ஒரு பெண்ணின் கருவுறுதலுக்கும் உள்ள தொடர்பு ?
Send us your feedback to audioarticles@vaarta.com
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக உடல் எடை கண்டறியப்பட்டுள்ளது.
கருவுறுதலுக்கு முன்பே உடல் எடையை கவனித்து அதற்கேற்றாற்போல் சீரான வாழ்க்கையை அமைத்து கொள்வது நல்லது.மேலும் உணவில் ஏற்படும் சில மாற்றங்களினால் தான் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.சரியான தகுந்த உணவு பழக்கம் இல்லாததால் உடல் எடை அதிகரித்து கருவுறும் நேரத்தில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றன.
மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்:
கர்ப்ப காலத்திற்கு முன்னும் சரி பிறகும் சரி சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது இந்த நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும்.உடற்பயிற்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது,கணையம் உருவாக்கம்,இன்சுலினுக்கு அதிக உணர்திறன் பெற உடற்பயிற்சி உதவும்.ஒரு எளிமையான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தாலே விரைவில் கர்ப்பம் தரிக்கும்.சுறுசுறுப்பாக வேலை செய்ய தொடங்குவது புத்தகம் படிப்பது,யோகா செய்வது,தோட்டங்களில் நேரத்தை செலவிடுவது போன்றவை நீரிழிவு நோயிலிருந்து நம்ம பாதுகாக்கும்.
கர்ப்பக்கால நீரிழிவு ஏற்படுவதற்கான காரணங்கள்:
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் காரணத்தினால் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலை அதிகரிக்கிறது.இந்த எதிர்ப்பை சரி செய்ய இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பீட்டா அதிகமான இன்சுலினை உற்பத்தி செய்கின்றன.இந்த அதிகமான உற்பத்தி செல்களை சோர்வடைய வைக்கிறது.இது இன்சுலின் சுரப்பதில் குறைப்பாட்டை ஏற்படுத்தும்.இந்த குறைபாடே கர்ப்பக் காலத்தில் உருவாகும் நீரிழிவு நோய்க்கு காரணமாக அமைகின்றன.
பிரசவமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்:
கர்ப்ப நேரத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் போது அது தாய்க்கு எடை அதிகரிப்பு,உயர் இரத்த அழுத்தம்,பனிக்குட நீர் அதிகரிப்பு, குறைப்பிரசவம்,பிறப்புறுப்பு சிதைவு, பிரசவத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகின்றன.மேலும் இதனால் குழந்தைக்கு இதயக் கோளாறு,உடல் எடை குறைவாகப் பிறத்தல்,சுவாசக் கோளாறு, மஞ்சள் காமாலை மற்றும் கால்சியம் குறைபாடோடு குழந்தை பிறக்கும்.இப்படி பிறக்கும் குழந்தை பிறந்தவுடன் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அல்லது பிரசவத்தின்போது கருவிலேயே மரணமோ அல்லது பிறந்து இறக்க நேரிடும்.
தடுப்பு முறை:
கர்ப்ப காலத்தில் தாய் முறையான உணவு முறை பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.தாய்க்கும் சேய்க்கும் ஏதுவான வாழ்க்கை சூழல் அமைப்பு,யோகா,உடற்பயிற்சி, சர்க்கரை அளவை அளவோடு வைத்து கொள்ளுதல்,செறிவூட்டாத கொழுப்பு , காய்கறிகள், புரதம், பழங்கள் எடுத்து கொள்ளலாம்.இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்வை உறுதி செய்வதோடு நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கும்.இது போன்ற மருத்துவ தகவல்கள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout