தல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல தோனியை பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் அணியை சொந்தமாக வைத்திருக்கும் நடிகை ப்ரித்திஜிந்தாவே தோனியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஞாயிறு அன்று சிஎஸ்கே அணிக்கும் ப்ரித்தியின் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் தல தோனியை ப்ரித்தி ஜிந்தா சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து ப்ரித்தி ஜிந்தா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.
கேப்டன் கூல் தோனியின் பல ரசிகர்களில் நானும் ஒருவர். ஆனால் இந்த முறை நான் அவரது மகள் ஸிவாவின் ரசிகையாக மாறியுள்ளேன். அவர் மகளை கடத்த திட்டமிட்டிருப்பதாகவும், எனவே மகளை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளும்படியும் அவரிடம் கூறினேன் என்று ப்ரித்தி கூறியுள்ளார். மேலும் நாங்கள் என்ன பேசினோம் என்பது குறித்து உங்கள் கற்பனையை கூறுங்கள் என்றும் அவர் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.,
இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகள் பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் 'நீங்கள் அடுத்த வருடம் என் டீமுக்குவந்துவிடுங்கள்' என்று ப்ரித்தி கூறியதாக பதிவு செய்துள்ளார். இன்னொருவர் உங்களை தோற்கடித்ததற்காக வருந்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
Captain cool has many fans including me, but off-late my loyalties are shifting to his little munchkin Ziva. Here I’m telling him to be careful - I may just kidnap her ?? Now it's time for you guys to Caption THIS photo...#Ting pic.twitter.com/bD1ADSXopc
— Preity G Zinta (@realpreityzinta) May 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com