காவிரி ஆற்றில் போட்டோஷூட்: திருமண நிச்சயம் செய்யப்பட்ட ஜோடி பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரியாற்றில் நடத்தப்பட்ட போட்டோசூட் ஒன்றில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் ஜோடி பரிதாபமாக ஆற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோசூட் எடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மைசூரைச் சேர்ந்த சந்துரு மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் 22ஆம் தேதி திருமணம் நடத்த இரு விட்டார்கள் முடிவு செய்து, திருமணத்திற்கான பணிகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோஷூட் எடுக்க சந்துரு மற்றும் சசிகலா முடிவு செய்தனர். இதற்காக காவிரி ஆற்றுக்கு வந்து அவர்கள் மீனவர் ஒருவரின் படகில் அமர்ந்து கொண்டு போட்டோ ஷூட்டை எடுத்தனர். அப்போது திடீரென இருவரும் தடுமாறியதால் படகு கவிழ்ந்து மீன்வர் உள்பட மூவரும் ஆற்றில் விழுந்தனர்.
இதில் மீனவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் பத்திரமாக கரை ஏறினார். ஆனால் இளம் ஜோடி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களை மீட்டனர். இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
திருமணம் நிச்சயமான ஜோடி திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் பரிதாபமாக ஆற்றில் விழுந்து பலியான சம்பவம் இரு வீட்டாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com