இதுதான் லவ்லி ப்ரிவெட்டிங் போட்டோஷூட்: ஆபாச தம்பதிகளுக்கு சாட்டையடி!

கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு முந்தைய ப்ரிவெட்டிங் போட்டோஷூட் கலாச்சாரம் பெருகி வருகிறது. அதிலும் ஒரு சிலரின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் ஆபாசத்தின் உச்சமாக இருப்பதும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதோடு, அந்த தம்பதிகளுக்கு சமூக வலைத்தள பயனாளிகளின் சாட்டையடி கமெண்டுக்களும் குவிந்து வருகிறது.

ப்ரிவெட்டிங் போட்டோஷூட் என்ற பெயரில் கிட்டத்தட்ட நிர்வாண மற்ற அரை நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருப்பது முகத்தை சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு திருமணத்திற்கு முந்திய ப்ரிவெட்டிங் போட்டோஷூட் கலைநயத்துடன் கூடிய நல்ல கற்பனை அனைவரையும் கவர்ந்துள்ளது. கொத்தனார் மற்றும் சித்தாள் போன்ற வேடத்தில் நடித்திருக்கும் மணமக்களின் இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இது தான் உண்மையான படைப்பாற்றல் என்றும் லவ்லி ப்ரிவெட்டிங் போட்டோஷூட் என்றும், இந்த அற்புதமான படைப்பாற்றல் கொண்ட புகைப்படக் கலைஞருக்கும், போஸ் கொடுத்த தம்பதியினருக்கும் பாராட்டுக்கள் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.