காவிரி ஆற்றில் போட்டோஷூட்: இளம்ஜோடி மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் செய்யப்பட்ட சந்துரு மற்றும் சசிகலா ஜோடி திருமணத்திற்கு முன்னர் பிரீ போட்டோஷூட் எடுக்க முடிவு செய்து முதுகளத்தூரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்து மீனவர் ஒருவரின் படகில் அமர்ந்து கொண்டு போட்டோ ஷூட்டை எடுத்தபோது திடீரென தடுமாறியதால் படகு கவிழ்ந்து பரிதாபமாக பலியாகினர் என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த சம்பவத்தில் தற்போது திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவிரி ஆற்றில் போட்டோஷூட் எடுக்க சந்துரு, சசிகலா மற்றும் படகோட்டி ஆகிய மூவரும் படகில் சென்றதாகவும், இதனையடுத்து கரையில் நின்று கொண்டிருந்த போட்டோகிராபர் விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிகிறது. இந்த போட்டோகிராபர் சசிகலாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் டைட்டானிக் படத்தில் வருவது போன்ற ஒரு போஸ் கொடுக்க போட்டோகிராபர் கூறியதை அடுத்து இருவரும் படகின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென சசிகலா அணிந்திருந்த ஹைஹீல்ஸ் காலணி சறுக்கியதால் அவர் தவறி விழுந்ததாகவும் இதனால் படகு பேலன்ஸ் தவறி கவிழ்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் லைஃப்ஜாக்கெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில் அந்த விதிமுறையை பின்பற்றாததால் தான் இந்த விபத்து நேர்ந்து இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More News

கோலிவுட்டின் ஈபிஎஸ் இவர்தான்!

தமிழகத்தை பொறுத்தவரை ஈபிஎஸ் என்றால் உடனே அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயர் தான் ஞாபகம் வரும்.

நவம்பர் 16ல் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்

இந்த வாரம் ஜெயிலில் இருந்து தப்பிப்பாரா பாலா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாலாஜி இந்த வாரம் ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இசையமைப்பாளராக மாறிய ஜிப்ரானின் 6 வயது மகன்! குவியும் வாழ்த்துக்கள்!

சற்குணம் இயக்கிய 'வாகை சூட வா' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிப்ரான் அதன் பின்னர் கமல்ஹாசனின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம்,

அசராமல் அடித்த மும்பை; பரிதாபமாகத் தோற்ற டெல்லி!

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடரின்  ஃபைனலில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி