'வலிமை' மொத்த வசூலை முன்பதிவிலேயே முறியடித்த 'பீஸ்ட்'!

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் மொத்த வசூலை முன்பதிவிலேயே ‘பீஸ்ட் திரைப்படம் முறியடித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகை பொறுத்தவரை அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருமே மாஸ் நடிகர்கள் என்பதும் இருவருடைய திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் வசூல் கிடைக்கும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் வசூலான தொகையைவிட ‘பீஸ்ட்’ படத்தின் முன்பதிவு வசூல் அதிகம் என கூறப்படுகிறது.

’வலிமை’ திரைப்படம் அமெரிக்காவில் 4 லட்சத்து 8 ஆயிரம் அமெரிக்க டாலர் வசூல் செய்தது என்றும் ஆஸ்திரேலியாவில் 2,07,000 ஆஸ்திரேலிய டாலர்கள் வசூல் செய்தது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

ஆனால் ‘பீஸ்ட்’ படத்தின் முன்பதிவில் கிடைத்த வசூல் மட்டும் அமெரிக்காவில் 4 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர் என்றும், ஆஸ்திரேலியாவில் 2 லட்சத்து 25 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ’வலிமை’ படத்தின் மொத்த வசூலை ‘பீஸ்ட்’ படத்தின் முன்பதிவு வசூல் முறியடித்து விட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.